ஈரான் நாட்டுக்கு பயணிக்க வேண்டாம்: இந்தியர்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

 

 

தெஹ்ரான்: ஈரான் நாட்டுக்கு பயணிக்க வேண்டாம் என இந்தியர்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; ஈரானில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் செயல்பாடுகளின் உறுதியற்ற நிலையால் ஈரானில் இருந்து புறப்படும் மற்றும் அந்நாட்டுக்கு வரும் சர்வதேச விமானங்களின் சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியா மற்றும் ஈரான் இடையே சில இயக்கப்படுவதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் இந்திய குடிமக்கள் வான்வழியாகவோ அல்லது தரைவழியாகவோ ஈரானுக்கு பயணம் வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்,

ஈரானில் உள்ள இந்தியர்கள் குறிப்பிட்ட நிலை எல்லைகள் வழியாக உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைமையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற முதல்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனையடுத்து ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகின்றன. இதனால் ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மீண்டும் முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: