மது விற்றவர் கைது

துவரங்குறிச்சி, ஏப்.23: துவரங்குறிச்சி அருகே அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக திருச்சி எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் எஸ்பி தனிப்படை பிரிவு போலீசார் துவரங்குறிச்சி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கிளிக்குடி பகுதியை சேர்ந்த சின்னையா மகன் கணேசன்(26), என்பவர் மது பாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. பின்னர் தனிப்படை போலீசார் கணேசனை கைது செய்து துவரங்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 107 மது பாட்டில்கள் மற்றும் ரூ.5,000 பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: