திருச்சி மாவட்ட 9 தொகுதிகளில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது

 

திருச்சி, ஏப்.22: தமிழ்நாட்டில் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது, திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நாடே எதிர்பார்க்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்.23ம் தேதி) நடைபெறுகிறது. திருச்சி மொத்த முள்ள 9 தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சாற்றப்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுகவுடன் தேஜ கூட்டணி, தவெக, நாதக என இம்முறை தேர்தலில் விறுவிறுப்பிற்கு எந்த பஞ்சமும் இல்லை. தேர்தல் வெற்றியை வேட்பாளர்கள் 50 சதவீதம் தீர்மானிப்பர், மற்ற 50 சதவீதம் பிரச்சாரமே தீர்மானிக்கிறது என்பது நிருபனமானது. அரசியல் கட்சி தலைவர்களின் வசனங்கள் அனைத்தும் மக்கள் மனம் கவர இடமளிக்கு் மேடையாக பிரச்சாரம் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. தெருக்கள் முழுவதும் கட்சிகாரர்கள் மக்களை நோக்கி தங்கள் கைகளை உயர்த்திய வண்ணமே இருந்தனர். 100 டிகிரிக்கும் அதிகமான வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசாரம் விறுவிறுத்தது.

Related Stories: