சமயபுரம், ஏப்.19: மண்ணச்சநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் விபரங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மண்ணச்சநல்லூர் தாசில்தார் அலுவலகங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23ம்தேதி நடைபெறுகிறது.
இதைமுன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்ட பேரவை தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா் மற்றும் அவா்களுக்குரிய சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட 24 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
இதற்காக 297 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியில், மண்ணச்சநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் பகல் இரவு என பாராமல் அரசு அதிகாரிகள் தீவிரமாக பணிகளை செய்து வருகின்றனர்.
