*சிறு காயங்களுடன் தப்பிய கிளீனர்
ஊட்டி : ஊட்டி அருகே 30 அடி பள்ளத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் டிரைவர், கிளீர்னர் ஆகிய 2 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.ஊட்டி அருகே உள்ள அணிக்கொரை பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (35).
இவர் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கோழிக்கழிவு, எரு மூட்டைகளை ஏற்றி கொண்டு பிக்கப் வாகனத்தில் வந்தார்.அப்போது, குன்னூர்-ஊட்டி இடையே எல்லநள்ளி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த 30 அடி பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், டிரைவர், பிரபாகரனுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை வேனில் வந்த கிளீனர் சபரீஷுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கேத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக ஊட்டி-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
