மாநில வளர்ச்சிக்காக திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்: அண்ணா பெயரில் கட்சி வைத்துக்கொண்டு பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி

 

சென்னை: மாநில வளர்ச்சிக்காக திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜூன கார்கே கூறினார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி காணொலி வெளியிட்டது தவறு. பாஜவின் விரிவுபடுத்தப்பட்ட அலுவலகம் போல் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மகளிர் மசோதவை எதிர்கட்சிகள் கொண்டு வர தடுக்கிறார்கள் என பாஜ கூறுவது பொய். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் எதிர்த்தோம்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பார்த்து பாஜவுக்கு பயம். ஆனால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்கட்சிகள் தோற்கடித்துவிட்டதாக மோடி தற்போது கூறி வருகிறார். மாநில வளர்ச்சிக்காக திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். அண்ணா கொள்கையை அதிமுக பின்பற்றி இருந்தால் பாஜவுடன் கூட்டணி வைத்து இருக்காது. திமுக, காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக உள்ளது. அதேபோன்று காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு உறுதுணையாக உள்ளது.

ராகுல் காந்தியின் பிரசார திட்டம் சூழல் காரணமாகவே முதல்வரும், ராகுல் காந்தியும் ஒன்றாக பிரசாரம் மேற்கொள்ள முடியவில்லை. ஒன்றாக போட்டியிடுகிறோம் ஒன்றாக வெல்வோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: