தொகுதி மறுவரையறையால் பாதிப்பு இல்லையாம் சொல்கிறார் சந்திரபாபு நாயுடு

 

சென்னை: டி-லிமிட்டேஷனால் தெற்கு மாநிலங்களுக்கு எந்த இழப்பும் இல்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னையில் நேற்று அளித்த பேட்டி: ஆந்திர பிரதேசம்-தமிழ்நாடு மக்கள் உறவு சகோதரத்துவ உறவாக இருக்கிறது.

தமிழ்நாடு செழுமையான பாரம்பரியமும் வளமும் கொண்ட மாநிலம். தொகுதி மறுவரையறை காரணமாக தெற்கு மாநிலங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. தற்போதைய தொகுதிகளில் 50 சதவீதம் கூடுதலாக அதிகரித்தால் அதில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும். இதைவிட சிறந்த வாய்ப்பு இல்லை. பெண்கள் மற்றும் தெற்கு மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

சென்னை ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ஒன்றிய அரசு பெரிய அளவில் நிதி வழங்கியது. சென்னை-பெங்களூரு-அமராவதி நகரங்களை இணைக்கும் அதிவேக ரயில் வழித்தடத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இரட்டை இன்ஜின் அரசு அமைந்தால் வேகமான வளர்ச்சி ஏற்படும். தமிழக வளர்ச்சிக்காக என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அரசியலில் புதியதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் எவ்வாறு முன்னேறுவார் என்பதை இப்போது கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: