சென்னை: பல்லாவரம் மசூதி சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று மாலை ஒரு கும்பல் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ஒரு அறையில் இருந்து கட்டுக் கட்டாக சுமார் ரூ.9 லட்சத்து 97 ஆயிரம் பணம் இருந்தது. அதிகாரிகள் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கும்பல் தப்பிச் சென்றது. பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளருக்கு ஆதரவான நபர்கள் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
