குளித்தலை மகா மாரியம்மன் கோயில் திருவிழா

குளித்தலை, ஏப். 20: கரூர் மாவட்டம் குளித்தலையில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இது அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலாகும். இக்கோயிலில் வருடம் தோறும் வைகாசி மாத திருவிழா நடைபெறுகிறது வழக்கம் . இவ்விழாவினை ஒட்டி தமிழ் புத்தாண்டில் இருந்து 3 நாட்கள் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மே 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை உற்சவம் மாரியம்மன் கடம்பர் கோயிலில் இருந்து அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு அரண்மனை மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 19ம் தேதி காலை 10:30 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் கோயிலில் இருந்து புறப்பட்டு தேரோட வீதியில் பல வந்து மீண்டும் நிலையை வந்தடையும்.

மதியம் 2 மணிக்கு பூக்கழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மே 22 வெள்ளிக்கிழமை காலை மஞ்சள் நீராட்டு விழா இரவு 7 மணிக்கு மேல் காவிரி ஆற்றில் கம்பம் வீடு நிகழ்ச்சி நடைபெ நடைபெறுகிறது. மே 24ம் தேதி 7 மணிக்கு அண்ணா அபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாட்டினை மகா மாரியம்மன் கோயில் பரம்பரை தர்மகத்தா புத்தியாலு பத்மநாதன் பூசாரியார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்,

 

Related Stories: