கரூர், ஏப். 16: கரூரில் வெப்ப அலை போல சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வருவதால் அனைத்து தரப்பினர்களும் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் தமிழகத்தில் கோடை காலமாக உள்ளது. இதி்ல், ஏப்ரல், மே மாதத்தில்தான் அதிகபட்ச வெயில் வாட்டி வதக்கும். அதனை வலியுறுத்தும் வகையில் கடந்த இரண்டு வாரங்களாக தினமும் 100 டிகிரியை தாண்டியும் வெயில் வாட்டி வருகிறது.
இதன் காரணமாக சிறுவர், சிறுமிகள், முதியவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகியோர் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். மேலும், இந்த உச்சபட்ச வெயில் காரணமாக ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் அவ்வப்போது லேசாக மழை பெய்து குளிர்விக்கும்., அதுவும் இந்தாண்டு பெய்யவில்லை. கடந்தாண்டு ஆண்டின் சராசரி மழை குறைவாக பெய்த நிலையில், இதுநாள் வரை கரூர் மாவட்டம் குறிப்பிடத்தக்க மழையை பெறாத காரணத்தினால் அனைத்து தரப்பினர்களும் கடும் அவதிப்படுகின்றனர்.
