நெல் அறுவடை பணி விரைவில் நிறைவு

கரூர், ஏப். 19: கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 36,700 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அமராவதி மற்றும் காவிரி ஆற்று பாசன பகுதிகளில் முக்கியமாக சம்பா பருவத்தில் இந்தச் சாகுபடி நடைபெறுகிறது. இவ்வாண்டு போதிய மழை பெய்ததால் கூடுதலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது பாசனப் பகுதிகள்: அமராவதி, காவிரி ஆற்றங்கரைகள்.

பருவம்: சம்பா சாகுபடி முக்கியமானது. முக்கியமாக குளித்தலை, லாலாபேட்டை, வாங்கல், நெரூர் வாங்கல் சோமூர், சுக்காலியூர் அப்பிபாளையம், சின்னதாராபுரம் ஆண்டாங்கோவில் விஸ்வநாதபுரி ஆகிய பகுதிகளாகும். நடப்பாண்டு சரியான அளவு மழை பெய்துள்ளதால் நெற் பயிர்களில் நல்ல மகசூல் கிடைப்பதற்கு வாய்ப்பாக இருப்பதால் சரியான நேரத்தில் அறுவடை நடைபெற்று வருகிறது.

நடப்பாண்டில் ஏக்கருக்கு 40 மூட்டை முதல் 60 மூட்டை வரை விவசாயிகள் நம்புகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் அறுவடைப்படி முடிவடையும் நிலையில் உள்ளது.

 

 

Related Stories: