வாட்டி வதைக்கும் வெயில் வீட்டில் முடங்கிய முதியவர்கள்

கரூர், ஏப். 19: கோடை வெயிலை சமாளிக்க முடியாமல், சிறுவர், சிறுமிகளும், முதியவர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக கரூர் மாவட்டம் முழுதும் சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வதக்கி வருகிறது. தினமும் 100 டிகிரியை தாண்டியும் வெயில் வாட்டி வதக்கி வருகிறது. இதன் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் முதியவர்களும், பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர், சிறுமிகளும் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

கடந்தாண்டு ஏப்ரல் மாதங்களில் அவ்வப்போது சிறிதளவு மழை பெய்து அவ்வப்போது குளிர்வித்து வந்தது. தற்போது மழையின்றி கடும் வெயில் வாட்டி வருவதால் அனைத்து தரப்பினர்களும் அவதியை சந்தித்து வருகின்றனர். மே மாதத்திலாவது கோடை மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Stories: