நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பாஜ வேட்பாளர் ரமேஷை ஆதரித்து, வேர்கிளம்பி பகுதியில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தில் அனுமதியின்றி மக்கள் கூட்டத்துக்கு இடையே பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை மறித்து அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் பிரசாரம் செய்தனர்.
இது தொடர்பாக கொற்றிக்கோடு எஸ்.ஐ. சத்தியசோபன் புகாரின் பேரில், வேட்பாளர் ரமேஷ், சரத்குமார், அதிமுக மாவட்ட செயலாளர் சுதர்சன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கலிங்கராஜபுரம் பகுதியில், அனுமதி பெற்றதை விட அதிகப்படியான ஆட்கள் மற்றும் வாகனங்களை திரட்டி பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முகவர் ஜோபிலின் மீது, நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல், விதியை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக குமரி தவெக வேட்பாளர் மீது மாதவன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
