திராவிட மாடல் அரசில் டைடல் பார்க் மூலம் அடைந்த வளர்ச்சி: ஓய்வுபெற்ற அதிகாரியின் வைரல் வீடியோ

 

சென்னை: தமிழகத்தில் ஐடி செக்டர் மற்றும் டைடல் பார்க் திட்டம் என தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்து ஓய்வுபெற்ற அதிகாரி பேசும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. முன்னாள் இந்திய வருவாய் சேவை அதிகாரி பாலமுருகன் பேசிய வீடியோ தான் அது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஓஎம்ஆர் ஒரு காலத்தில் காடாக இருந்தது. அந்த பக்கம் போக பயமாக இருக்கும். ஆனால் தற்போது எவ்வளவு வளர்ந்து இருக்கு, எவ்வளவு நிறுவங்கள் உள்ளது. இது எல்லாம் எப்படி உருவானது தெரியுமா? 1999- 2000ம் ஆண்டு முதல் முறையாக கலைஞர் அந்த பகுதியில் டைடல் பார்க் கொண்டுவந்தார். அது தான் தமிழகத்தில் ஐடி நிறுவனம் கொண்டு வருவதற்கான விதை. இந்த டைடல் பார்கில் 12000 பேர் வேலை செய்கிறார்கள். கோவை, பட்டாபிராம், திருச்சி, ஓசூர் என பல்வேறு மாவட்டங்களில் டைடல் பார்க் உருவாக்கி 45000 பேர் வேலை செய்யும் அளவிற்கு ஐடி வளர்ந்து உள்ளது.

வேலூர், விழுப்புரம் திருப்பூர் காரைக்குடி , தூத்துக்குடி என எல்லாம் மாவட்டத்திலும் மினி டைடல் பார்க் உருவாக்கி அங்கு இருக்கும் இளைஞர்கள் ஐடி நிறுவனத்தில் பணி மேற்கொள்ள இந்த அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதுமட்டுமின்றி மற்ற 9 இடங்களில் மினி டைடல் பார்க் உருவாகி கொண்டு இருக்கிறது. இது வந்தால் அங்கு இருக்கும் மாணவர்கள் சொந்த மாவட்டத்தில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

டைடல் துளிர் என்ற திட்டம் மூலம் தொழில் முனைவோர்க்கும் உதவிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இது போன்று தமிழ்நாடு முழுவதும் ஐடி செக்டரில் வேலைவாய்ப்பு உருவாக்கி வளர்ச்சியை உருவாக்குவது தான் திராவிட மாடல் அரசு. இன்னும் இளைஞர்களுக்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி கேட்க போறீங்களா? எல்லாம் எதிர்காலத்தை யோசனை செய்து திட்டம் போடும் திராவிட அரசுக்கு ஆதரவு தர போறீங்களா? இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: