வால்பாறையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததையடுத்து, எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

.கேரளாவில் இருந்து வந்த 16 பேர் கொண்ட சுற்றுலா வாகனம் வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் 13ஆவது கொண்டை ஊசி வளைவில் 800 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. மலைச்சாலையில் உருண்டு விழுந்ததில் வேன் முற்றிலும் நொறுங்கியது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிலர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். “கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சென்ற வேன் ஒன்று 13-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துகொள்வதுடன், மறைந்தோரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: