இந்தியாவின் மக்கள் வேறு, பாஜக வேறு; பாஜக தங்களையே இந்தியாவின் பாதுகாவலராக நினைத்துக்கொள்கிறது: ராகுல்காந்தி பேச்சு

 

டெல்லி: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் உண்மையை எடுத்து சொன்னால் ஒன்றிய அரசுக்கு ஏன் கசக்கிறது என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியல் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உரையாற்றினார். தன் வாழ்க்கையில் சகோதரி பிரியங்கா செய்த செயல் குறித்து ராகுல் காந்தி பெருமிதம் அடைந்துள்ளார். பிரியங்கா சகோதரராக நான் பிறந்ததை பெருமையாக கருதுகிறேன். நமது நாட்டின் சிந்தனையில் பெண்கள் மிகப்பெரிய உந்துசக்தியாக திகழ்கிறார்கள். அனைவருமே தங்கள் வாழ்க்கையில் பெண்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்கிறோம். தாய் தான் தன்னுடைய முதல் ஆசிரியர்

இந்திய வரைப்படத்தையே மாற்ற முயற்சிக்கிறார்கள். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் உண்மையை எடுத்துச் சொல்வதால் ஒன்றிய அரசுக்கு ஏன் கசக்கிறது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மகளிர் இடஒதுக்கீடு மசோதாவே கிடையாது. இந்திய பெண்களின் பின்னால் ஒளிந்து கொள்ளும் வெட்கக்கேடான செயலை பாஜக செய்கிறது. ஓ.பி.சி,பட்டியலின மக்களின் அதிகாரத்தை பறிப்பதே மசோதாவின் நோக்கம். ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள தொகுதி மறுவரையறை மசோதா வெட்கப்பட வேண்டிய ஒன்று. தொகுதி மறுவரையறை மசோதா தேச துரோகமானது

ஜம்மு – காஷ்மீரைப் போலவே அனைத்து மாநிலங்களையும் மாற்ற பாஜக முயற்சி செய்கிறது. தமிழ்நாட்டை அதிகாரமற்ற மாநிலமாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. தொகுதி மறுவரையறை மசோதா மூலம் ஓ.பி.சி, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எந்த அதிகாரமும் தரமாட்டார்கள் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தி பேச்சுக்கு மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்து என்ற போதிலும் ஓ.பி.சி., பட்டியலின மக்களுக்கு அதிகாரம் கிடைப்பதில்லை. தமிழ்நாட்டை அதிகாரமற்ற மாநிலமாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களின் வாக்குகளை பறிக்கும் முயற்சியை எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து முறியடிக்கும். அரசியலமைப்பை விட மனுஸ்மிருதி முக்கியம் என்று நினைக்கிறது பாஜக. இது மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா அல்ல, மகளிருக்கு அதிகாரமளிப்பது தொடர்பாக இதில் எதுவுமில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது தனியாக வாக்கெடுப்பு நடத்தினால் எதிர்க்கட்சிகள் ஆதரிக்கத் தயார். ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி மக்களவையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் மசோதாவை எதிர்க்கின்றன

2023ல் கொண்டுவரப்பட்ட மசோதாவே மகளிர் இட ஒதுக்கீடுக்கான மசோதா. மேஜிக் காட்டுவது போல 3 மசோதாக்கள் ஒன்றின் மீது ஒன்றாக மறைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பறிக்கும் மசோதாவாக இது உள்ளது. ஒன்றிய அரசின் மசோதாக்களால் தேசம் தாக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மசோதா நிறைவேறாது என்று பாஜகவுக்கு தெரிந்தும் பீதியில் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மாயஜாலக்காரர் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். பண மதிப்பிழப்பு தாக்குதல் நடத்திய வித்தைக்காரர் பிரதமர் மோடி. பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தி கருத்துக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியை ராகுல்காந்தி அவமதிக்கிறார் என ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ராகுல் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தியை பேசவிடாமல் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு தொடர்ந்து குறுக்கிட்டுள்ளனர்.

பண மதிப்பிழப்பு, ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றை பிரதமர் மோடி செய்த விதம் குறித்து ராகுல் விமர்சனம் செய்துள்ளார். பாஜக மட்டுமே இந்தியா அல்ல, இந்தியாவின் ராணுவமும் அல்ல, வெறும் அரசியல் கட்சி பாஜக. பாஜகவினர் தாங்கள் மட்டுமே இந்தியாவின் மக்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், இந்தியாவின் மக்கள் வேறு, பாஜக வேறு. பாஜக தங்களையே இந்தியாவின் பாதுகாவலராக நினைத்துக்கொள்கிறது. ஆனால், பாஜக வேறு, இந்திய ராணுவம் வேறு. தாங்கள் யார் என்பது தொடர்பாக பாஜகவினரிடம் பெரும் குழப்பம் நிலவுகிறது.

இந்திய மக்களையோ, ராணுவத்தையோ விமர்சிக்கவில்லை, பாஜகவை மட்டுமே விமர்சிக்கிறோம். ஆனால் பாஜக ராணுவத்தின் பின்னாலும் மக்களின் பின்னாலும் ஒளிந்து கொள்கிறது. கோழைகள் போல ராணுவத்தின் பின்னால் ஒளிந்துகொள்வதை பாஜக நிறுத்த வேண்டும். தொகுதி மறுவரையறை மசோதாவை வீழ்த்துவதை நீங்கள் கண்ணால் பார்ப்பீர்கள். கோழைகளை போல ஒளிந்துகொள்ளாமல் எதிரில் வந்து நேருக்கு நேர் விவாதிக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

 

 

 

Related Stories: