இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் தற்காலிக போர்நிறுத்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க 10 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்ததோடு, இது தாம் நிறுத்திய 10வது போர் என்றும் கூறினார். லெபனான் அதிபர் ஜோசப் அவுன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் “சிறப்பான” உரையாடல்களை நடத்தியதாகவும், இன்னும் 6 மணி நேரத்தில் போர் நிறுத்தம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில்;
“லெபனானின் மிகவும் மதிக்கப்படும் ஜனாதிபதி ஜோசப் அவுன் மற்றும் இஸ்ரேலின் பிரதமர் பிபி நெதன்யாகு ஆகியோருடன் நான் சற்று முன்பு அருமையான உரையாடல்களை மேற்கொண்டேன். தங்கள் நாடுகளுக்கு இடையே அமைதியை அடைவதற்காக, இந்த இரு தலைவர்களும் கிழக்கு நேரப்படி மாலை 5 மணிக்கு 10 நாள் போர் நிறுத்தத்தை முறைப்படி தொடங்கப்படும் என கூறியுள்ளார்.

அமெரிக்க இஸ்ரேலும் லெபனானும் “34 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாகச் சந்தித்தன. இரு நாடுகளும் “நீடித்த அமைதியை” அடைவதை உறுதி செய்யுமாறு துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் கூட்டுப் படைத் தலைவர் டான் கெய்ன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Related Stories: