டெல்லி: 131வது அரசியல் சட்ட திருத்தம், தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்களை ஆதரித்து மக்களவையில் பிரதமர் மோடி பேசினார். அப்போது; அதிமுக்கியத்துவம் வாய்ந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்பதை பாக்கியமாக கருதுகிறேன். இந்த 3 மசோதாக்களும் நாட்டிற்கு புதிய திசையை காட்டும். 3 மசோதாக்களும் இந்தியாவின் எதிர்க்காலத்தை தீர்மானிக்கக் கூடியது. 3 மசோதாக்களும் எனது அரசு, நாட்டின் வளர்ச்சியில் எவ்வளவு உறுதியாக உள்ளது என்பதை பறைசாற்றும் என்று கூறினார்
