கோடை வெயிலின் தாக்கத்தால் குளிர்பான விற்பனை அமோகம்

சிவகாசி, ஏப்.16: சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்பொழுது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தாகம் தீர்க்க இளநீர் கடை, கரும்பு ஜூஸ் உள்ளிட்ட கடைகளை தேடி சென்று தங்களின் தாகத்தை தீர்த்து வருகின்றனர்.

சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தற்பொழுது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சியினரும் பிரசாரத்திற்கு வெளியில் செல்லும் பொழுது வெப்பத்தால் ஏற்படும் தாகத்தை தீர்ப்பதற்கு ஏதாவது குளிர்பானங்களையும், குளிரூட்டபட்ட தண்ணீரையுமே குடிக்க தோன்றுகிறது.

ஆனால் இவற்றை விட தர்பூசணி, இளநீர், கரும்பு ஜூஸ் போன்றவை உடல் நலத்திற்கு நல்லது என்பதாலும் இருந்த போதும் இளநீரும் தற்சமயம் விலை கொஞ்சம் அதிகமாக உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் வாங்கி தங்களது தாகத்தை தீர்ப்பதற்கு கரும்பு ஜூஸ், தர்பூசணி, சர்பத் உள்ளிட்டவை சிறந்ததாக உள்ளது. இதனால் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் தர்பூசணி விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது.

 

Related Stories: