மாவட்ட இளையோர் ஆண்கள் ஹாக்கி அணிக்கு வீரர்கள் தேர்வு

மதுரை, ஏப். 16: தமிழ்நாடு மாநில அளவிலான இளையோர் ஆண்கள் ஹாக்கி போட்டி மாவட்டங்களுக்கு இடையே வரும் 27ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை கோவையில் நடைபெறுகிறது. மாநில போட்டியில் பங்கேற்பதற்கு மதுரை மாவட்ட இளையோர் ஆண்கள் ஹாக்கி அணி வீரர்கள் தேர்வு, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள சர்வதேச ஹாக்கி அரங்கில் நேற்று காலை துவங்கியது. கடந்த 1.1.2007 அன்று அல்லது அதன் பின்னர் பிறந்தவர்களாக இருப்போர் தகுதியுடையவர்களாக பங்கேற்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இத்தேர்வில் தங்கள் வயதை நிரூபிக்கும் வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை அசலை கொண்டு வந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இத்தேர்வில் 2 கோல் கீப்பர்கள் உள்பட மொத்தம் 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் மதுரையில் நடைபெறுகிறது என மதுரை மாவட்ட ஹாக்கி இடைக்கால கமிட்டியினர் தெரிவித்தனர்.

 

Related Stories: