1,500 கிலோ புகையிலை அழிப்பு

நத்தம், ஏப். 16: நத்தம் பகுதியில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 1,500 கிலோ புகையிலை பொருட்கள் தீ வைத்து அழிக்கப்பட்டது. நத்தம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து நத்தம் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இவை கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 1,500 கிலோ புகையிலை பொருட்களாகும்.

இந்நிலையில் அவற்றை அழிக்க நத்தம் நீதிபதி ஆப்ரின் பேகம் உத்தரவிட்டதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், எஸ்ஐ கார்த்திகேயன், மலைச்சாமி,தலைமைகாவலர் கணேஷ் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நத்தம் பேரூராட்சி குப்பை கிடங்கில் 1,500 கிலோ புகையிலை பொருட்களையும் தீ வைத்து அழித்தனர்.

 

Related Stories: