நடுப்படுகை பகுதியில் மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

நீடாமங்கலம்,ஏப். 16: நீடாமங்கலம் அருகே நடுப்படுகை பகுதியில் மிளகாய் சாகுபடி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள சித்தமல்லி, வெள்ளங்குழி, நடுப் படுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக கோடை சாகுபடியாக கத்தரி, மிளகாய், வெண்டை, மரவள்ளிக்கிழங்கு, சோளம், பருத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான சாகுபடிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோரையாறு நடுப்படுகை பகுதியில் மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் வயல்களில் மிளகாய் பழுத்து அறுவடைக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: