அபாகஸில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை

பேராவூரணி, ஏப்.16: பேராவூரணியை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் அபாகஸில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை புரிந்தமைக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. பேராவூரணி ஒன்றியம் நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் முகமது அப்ராஸ், சென்னையிலிருந்து இயங்கி வரும் அபாகஸ் பயிற்சி பள்ளியில் இணைய வழியில் படித்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்ததற்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் கலாராணி தலைமை வகித்து சாதனை புரிந்த மாணவர் முகமது அப்ராஸ்க்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா, பட்டதாரி ஆசிரியர் திருஞானம், சிறப்பு ஆசிரியர் முருகேசன், தற்காலிக ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, காவியா ஆகியோர் கலந்து கொண்டனர்

 

Related Stories: