கந்தர்வகோட்டை பகுதிகளில் எள் அறுவடை பணிகள் மும்முரம்

கந்தர்வகோட்டை, ஏப்.16: கந்தர்வகோட்டை பகுதிகளில் எள் அறுவடைப் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் உள்ள விவசாயிகள் நெல், கரும்பு, கடலை, சோளம், எள் போன்ற பயிர் செய்து வருகின்றனர். விவசாயிகள் தற்சமயம் எள் அறுவடை செய்து மகசூல் சேகரிந்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது: எள் எதிர்பார்த்த மகசூல் இல்லை.

விலையும் குறைவாகவே ககிடைக்கிற்து. எள்ளுக்கு அரசு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையத்தை அரசு நடத்துவதுபோல் எள் கொள்முதல் செய்ய வேண்டும். அரசு கொள்முதல் செய்யும் எள் முறையாக போட்டி விற்பனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறார்கள்.

 

Related Stories: