பொன்னமராவதி,ஏப்.16: பொன்னமராவதி அருகே புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளிக்குழுத்தலைவர் ராமச்சந்திரன் தலைமைவகித்தார். முன்னாள் ஊராட்சித்தலைவர் முருகேசன், பள்ளி புரவலர் கம்பர் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
பள்ளி ஆசிரியர் ராமமூர்த்தி வரவேற்றார். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெற்றோர்ஆசிரியர் கழக நிர்வாகிகள் வள்ளியப்பன், அன்னாச்சாமி கோபால் உட்படபலர் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி மேலாண்மைக்குழு ஆசிரியர் ரேணுகாதேவி நன்றி கூறினார். இதில் பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
