ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: மாநிலங்களவை ஆம்ஆத்மி துணை தலைவராக இருந்த ராகவ் சதாவை அந்த பதவியில் இருந்து ஆம் ஆத்மி சமீபத்தில் நீக்கியது. ராகவ் சதாவுக்கு பதில் அசோக் மிட்டல் என்பவரை புதிய துணை தலைவராக ஆம் ஆத்மி நியமித்துள்ளது. பஞ்சாப் மாநில பிரச்னைகளை அவர் நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லை என்றும் அவையில் பாஜ அரசுக்கு எதிராக மென்மையான அணுகுமுறையை கடைபிடித்தார்.

அவையில் இருந்து வெளிநடப்பு போன்றவற்றில் பங்கேற்காமல் அவர் தவிர்த்து வந்தார் என ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம் சாட்டினர். இந்த பதவி நீக்கத்தை அடுத்து அவருக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை பஞ்சாப் அரசு திடீரென விலக்கி கொண்டது. இந்த நிலையில், ராகவ் சதாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

Related Stories: