அமராவதி: தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயல் தலைவராக நாரா லோகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில் ஆளும் கட்சியான தெலுங்குதேசம் கட்சியின் தலைவராக முதல்வர் சந்திரபாபுநாயுடு உள்ளார். இந்த நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் நேற்று தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் நந்தியால் தொகுதி எம்பி பி. சபரி, கட்சியின் முதல் பெண் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், காஜுவாக்கா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. சீனிவாச ராவ் மீண்டும் ஆந்திர மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜேஷ் கிலாரு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம் மோகன் நாயுடு ஆகியோரும் தேசிய பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
