அஸ்தினாபுரத்தில் விளையாட்டு வீராங்கனைகளிடம் ஐ.ஜே.கே. வேட்பாளர் வி.வெங்கடேசன் ஓட்டு வேட்டை: தொகுதியில் விளையாட்டு திடல் அமைக்கப்படும் என்று உறுதி

சென்னை: பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் வழக்கறிஞர் வி.வெங் கடேசன் இன்று அஸ்தினாபுரம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அங்கு ஸ்டேட் பேங்க் காலனி விளையாட்டு திடலில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். அ.தி.மு.க. ஆட்சியில் இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்காக வழங்கப்பட்ட திட்டங்கள், விளையாட்டு ஆர்வத்தை அதிகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட செயல்கள் பற்றி எடுத்துக்கூறியும் தான் வெற்றி பெற்றதும் தொகுதியில் உள்ள இளைஞர் மற்றும் இளம் பெண்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுப் போட்டிகள் நடக்கப்படும்.

தொகுதி இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பயன்பெ றும் வகையில் தொகுதியில் ஒரு விளையாட்டு திடல் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். வேட்பாளருடன் அ.தி.மு.க. பகுதி கழக செயலாளர் அருணாச்சலம், மாமன்ற உறுப்பினர் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்

Related Stories: