புதுவையை போன்ற நிலை பாஜக-வால் தமிழகத்திலும் அதிமுக-விற்கு ஏற்படும் : திருமாவளவன் பேச்சு

பெரியபாளையம்; புதுச்சேரியில் அதிமுக-வை விட பாஜக வளர்ந்திருப்பதை போன்று தமிழ்நாட்டிலும் தேர்தலுக்கு பின்னர் அதிமுக தேய்ந்து பாஜக வளர கூடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார். கும்மிடிப்பூண்டி பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கோவிந்தராஜனை ஆதரித்து பெரியபாளையம் பஜாரில் திருமாவளவன் வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், பாஜக-வினர் முகமூடி அணிந்து கொண்டு வந்து அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க துடிக்கிறார்கள் என்றார்.

ஒருகாலத்தில் புதுவையில் அதிமுக 10-க்​கும் மேற்​பட்ட தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. ஆனால் இப்​போது பாஜக 10 தொகு​தி​களிலும், அதி​முக 2 தொகுதிகளில் மட்​டுமே போட்​டி​யிடு​கிறது. இதன் மூலம் புதுச்​சேரி​யில் அதி​முக தேய்ந்​து, பாஜக வளர்ந்​துள்​ளது தெளிவாகிறது. தமிழகத்​தில் தேர்​தலுக்​குப் பிறகு அதி​முக தேய்ந்து பாஜக வலிமை பெறப்​போகிறது. இது நடக்க கூடாது என்றார்.

தமிழ்நாட்டில் தம்முடைய வலதுசாரி அரசியலை வலுப்பெற செய்வதற்கு சங்பரிவார்கள் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். அவர்கள் அதிமுக-வோடு கை கோர்த்து தமிழகத்திற்குள் வருகிறார்கள், பாமக அன்புமணியோடு கை கோர்த்து வருகிறார்கள். இவர்கள் சராசரி அரசியல்வாதிகள் இல்லை, அம்பேத்கர் உருவாக்கி தந்துள்ள அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவர்கள்.

மு.க.ஸ்​டா​லின் ஆட்சி தொடர்ந்​தால் தமிழகம், தமிழர் பண்​பாடு பாது​காப்​பாக இருக்​கும். திரு​வள்​ளுவர், பெரியார் பாது​காப்​பாக இருப்​பர். ஆனால் இங்கு அதி​முக,​பாஜக கட்சிகள் வலிமை பெற்​றால் பெரி​யார் அரசியலை அவர்கள் வீழ்த்​து​வார்​கள். தமிழ்நாட்டில் பெரியார் அரசியலை வீழ்த்தினால் அது அம்பேத்கரை வீழ்த்தியதாக பொருள் என்றும் திருமானவளவன் எச்சரித்து உள்ளார். பாஜக-வை தனித்து எதிர்க்கும் வலிமை இல்லாததாலேயே தங்கள் கட்சி திமுக-வுடன் தொடர்ந்து கை கோர்த்துள்ளதாக குறிப்பிட்டார். தமிழகத்​தில் ஒரு காலத்​தில் பாஜக ஒன்​றுமே இல்லை என்ற நிலை இருந்​தது. ஆனால் அதி​முக​-வால் இப்​போது 11 சதவீதம் வாக்​குள்ள கட்​சி​யாக மாறி​யுள்​ளது. பொதுவாக கூட்டணி கட்சிகளுக்கு துரோகம் இழைப்பது என்பது பாஜக-விற்கு கைவந்த கலை. தற்போது தமிழகத்தில் அதிமுக இரண்டாவது இடதில் இருப்பது பாஜக-வின் கண்களை உறுத்துகிறது. எனவே இந்த தேர்தலுக்கு பிறகு அதிமுக-வின் எதிர்காலம் கேள்விக்குறியாக போகிறது என்றும் திருமாவளவன் பேசினார்.

Related Stories: