ஊரணிபுரம் கிராமத்தில் 18 வயது நிரம்பிய அனைவரும் தேர்தலில் வாக்களிக்க விழிப்புணர்வு

கறம்பக்குடி, ஏப்.10: தீத்தான் விடுதி வருவாய் கிராமம் ஊரணிபுரம் கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் கறம்பக்குடி சரகத்திற்கு உட்பட்ட தீத்தான் விடுதி வருவாய் கிராமத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி க்கு கறம்பக்குடி தாசில்தார் பிரவீனாமேரி கலந்து கொண்டு தலைமை வகித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

கறம்பக்குடி தாலுகா தேர்தல் துணை வட்டாட்சியர் ஸ்டெல்லா, கறம்பக்குடி வருவாய் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீத்தான் விடுதி பொது மக்களிடம் 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி யில் வருவாய் உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள், தாலுகா அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

Related Stories: