மதுரை என்றாலே ரவுடிதானா? சசிகுமார் கேள்வி

சென்னை: கடந்த 2022ம் ஆண்டு வெளியான ‘வதந்தி’ வெப்தொடரின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது அதன் 2வது சீசன் ‘வதந்தி சீசன் 2 : தி மிஸ்டரி ஆப் மணி’ என்ற பெயரில் கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் புஷ்கர், காயத்ரி தயாரித்துள்ளனர். முதல் சீசனை இயக்கிய ஆன்ட்ரூ லூயிஸ் இந்த சீசனையும் இயக்கியுள்ளார்.

சசிகுமார், யஷ்வந்த், அனகா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் 7ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. இதன் புரொமோஷன் நிகழ்ச்சியில் சசிகுமார் பேசுகையில், ‘மதுரையில் நடக்கும் கதை என்பதால் மணி, குட்டி புலி என ரவுடி கதாபாத்திரங்களை தான் யோசிப்பார்கள். இதுவரை யாரும் என்னை போலீஸ் வேடத்தில் நடிக்க வைக்க யோசிக்கவில்லை. கதையை கேட்டவுடன் இயக்குனரிடம், ‘நான் மணி கேரக்டரில் நடிக்கிறேனா?

அல்லது போலீஸ் மூஸி ராசா கேரக்டரில் நடிக்கிறேனா?’ என்று திரும்ப, திரும்ப கேட்டேன். அதற்கு அவர் ‘மூஸா ராசா கேரக்டரில் நடிக்கிறீர்கள்’ என்றார். மதுரையில் இருக்கும் ஒரு சாதாரண போலீஸ் என்பதை இயக்குனர் அடிக்கடி எனக்கு நினைவுப்படுத்தி கொண்டே இருப்பார். ஒரு நிரபராதியை காப்பாற்ற போலீஸ் போராடும் கதை. முதல் சீசனை விட 2வது சீசன் புதுமையாக இருக்கும். இது வெளியான பிறகு நான் நிறைய போலீஸ் வேடங்களில் நடிப்பேன் என்று நினைக்கிறேன்’ என்றார்.

Related Stories: