மும்பை: ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிப்பில், ‘ஜுக்னி’ என்ற ஆல்பம் சமீபத்தில் வெளியானது. சோனு துக்ரல், பி பிராக் இணைந்து பாடிய இப்பாடலின் வீடியோவில் ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஆடை விலகல் அசவுகரியம் நடந்ததாக கூறி, குறிப்பிட்ட காட்சி சோஷியல் மீடியாவில் பரவி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாடலின் தயாரிப்பாளர்கள் உடனடியாக வீடியோவில் இருந்த குறிப்பிட்ட அந்த பகுதியை மங்கலாக மாற்றி வெளியிட்டனர்.
சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் அந்த காட்சியை பழையபடியே மாற்றியதால், ரசிகர்கள் மத்தியில் இந்த பிரச்னை மேலும் தீவிரமடைந்தது. இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு புதிய திருப்பமாக பாடகர் சோனு துக்ரல் போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
சைபர் கிரைம் குற்றப்பிரிவு அதிகாரியிடம் புகார் மனுவை அளிக்கும் போட்டோவை தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு, ‘எனது ஜுக்னி பாடலின் வீடியோ காட்சி ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலியாக மாற்றப்பட்டு இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரைவில் விரிவாக பகிரங்கமாக நான் பேசுவேன்’ என்று சோனு துக்ரல் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், இந்த விவகாரம் குறித்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் பாடல் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
