பந்தலூர் பகுதியில் தொடர் கொள்ளை அம்மன் தாலி திருட்டு: லாரிகளில் பேட்டரி மாயம்

*பொதுமக்கள் அச்சம்

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரங்கோடு சிங்கோனா மாரியம்மன் கோவிலை உடைத்து தங்க நகை மற்றும் உண்டியலை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பந்தலூர் அருகே சேரங்கோடு அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ சிங்கோனா பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோயிலின் கிரில் கேட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு தாலிகள் மற்றும் ஒரு கம்மல் மற்றும் உண்டியல் பெட்டி ஆகியவற்றை திருடிச்சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து கோயில் கமிட்டி நிர்வாகிகள் சேரம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சேரம்பாடி இன்ஸ்பெக்டர் சந்திரசீலன் மற்றும் போலீசார் விசாரனை மேற்கொண்டு ஊட்டியில் இருந்து கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசிரனை நடத்தி வருகின்றனர். அதேபோல் சேரம்பாடி சோலாடி செல்லும் சாலைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராசேந்திரபிரசாத் என்பவருடைய டிப்பர் லாரியில் இருந்து பேட்டரியையும் ,தேவாலா கைதகொல்லி பகுதியில் நாசர் என்பவரின் டிப்பர் லாரியில் பொறுத்தப்பட்டிருந்த பேட்டரியும் மர்ம கும்பல் திருடிச்சென்றது தெரிய வந்தது. ஒரே நாளில் தொடர் கொள்ளைச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: