நெல்லை: நெல்லை மாவட்டம், விகேபுரம் டாணா பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சொரிமுத்து (30). இவர் விருதுநகரில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சொரிமுத்து குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவரது மனைவி குழு கடன் பெற வேண்டியிருந்ததால் தனது பெற்றோர் வீட்டில் விட்டு, விட்டு நேற்று மாலை 4.30 மணியளவில் விருதுநகர் செல்வதற்காக விகேபுரம் கடைசி பஸ் ஸ்டாப்பில் தனியாக நின்றிருந்தார்.
அப்போது 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரெ அரிவாளால் ெசாரிமுத்துவை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி சொரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்து அங்கு நின்றிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றது. விகேபுரம் போலீசார் முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். இதில் பைக் எண் மற்றும் 4 பேரின் உருவம் பதிவாகியிருந்தது. தொடர்ந்து பல கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
