காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு சிறுபிள்ளைத்தனம்: டிடிவி.தினகரன் கருத்து

 

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த திராவிட அரசாங்கங்களின் மூத்த அமைச்சர்களாக இருந்தவர்கள், குறிப்பாக துரைமுருகன் போன்ற நீர்ப்பாசனத் துறையிலே நீண்ட நாள் அமைச்சராக இருந்தவர், அதுபோல முன்னாள் முதலமைச்சர்கள் ஸ்டாலின், இபிஎஸ் என கடந்த 40, 50 ஆண்டு காலமாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களாக இருந்தவர்களின் அனுபவங்களை அவர்களோடு ஆலோசித்து பெறுவதன் மூலம் நமது ஜீவாதாரப் பிரச்னையாகிய காவிரி பிரச்னையில் இன்னும் சிறப்பாக முன்னெடுக்க முடியும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்கள், விவசாயிகளின் எண்ணம்.இவ்வாறு அவர் பேசினார்.

 

Related Stories: