நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு துயருறும் ஒரு பெற்றோரை கூட பிரதமர் சந்தித்ததில்லை: ராகுல்காந்தி டிவிட்

 

சென்னை: மாமல்லபுரத்தில் பயிற்சி முகாமுக்கு அழைத்து வரப்பட்ட, நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். இதுகுறித்து, ராகுல்காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளையை இழந்து துயருறுவதைப் பார்ப்பதை விட வேதனையானது வேறு எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது உள்ளிட்டவை மாணவர்களின் பல ஆண்டுகால உழைப்பை ஒரே இரவில் அழித்துவிட்டது.

பிரதமரோ, மாணவர்களை “மன்னிப்பது” பற்றிப் பேசும் துணிச்சலைக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.  துயருறும் ஒரு பெற்றோரைக்கூட அவர் சந்தித்ததில்லை. இந்திய மாணவர்களுக்கு பிரதமரின் மன்னிப்பு தேவையில்லை. அவர்களுக்கு கிடைக்க வேண்டியது பிரதமரின் மனப்பூர்வமான மன்னிப்புக் கோரல்தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: