வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.209 குறைப்பு: சென்னையில் ரூ.2,906 ஆக நிர்ணயம்

 

சேலம்: நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.192 முதல் ரூ.209 வரை குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், கடந்த சில மாதங்களாக காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வந்தது. குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.990 முதல் ரூ.1000 வரை அதிகரித்தது.

இதேபோல், 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த ஜூன் மாதம் ரூ.29 உயர்த்தப்பட்டது. அதன்படி சென்னையில் ரூ.957.50க்கு விநியோகம் செய்யப்பட்டது. ெதாடர்ந்து, கடந்த மாதம் வர்த்தக சிலிண்டர் மட்டும் ரூ.172.50 முதல் ரூ.177 வரை குறைக்கப்பட்டது. இதனிடையே, கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை 20 சதவீதம் வரை உயர்ந்ததால், நடப்பு மாதத்திற்கான சிலிண்டர் விலையும் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் நிலவி வந்தது.

இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (ஆகஸ்ட்) காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு நேற்று அதிகாலை வெளியிட்டது. இதில் யாரும் எதிர்பாராத வகையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.192 முதல் ரூ.209 வரை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.200 விலை குறைந்துள்ளது. அதன்படி கடந்த மாதம் சென்னையில் ரூ.3,106 ஆக இருந்த வர்த்தக சிலிண்டர் நேற்று ரூ.200 குறைந்து ரூ.2,906 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தொடர்ந்து 2வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை. இதனால் கடந்த ஜூன் மாத விலையே தொடர்ந்து நீடிக்கிறது.

Related Stories: