உயிருக்கு ஆபத்து… பாதுகாப்பு கொடுங்க’: எஸ்பியிடம் தவெக எம்எல்ஏ மனு அளித்ததால் பரபரப்பு

 

மதுரை,: உயிருக்கு ஆபத்து உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ, எஸ்பியிடம் மனு அளித்துள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி எம்எல்ஏவும், தவெக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான விஜய், நேற்று மதுரை எஸ்பி தேவநாதனிடம் அளித்த புகார் மனுவில், ‘‘நான் வெற்றி பெற்றதையொட்டி, தொகுதி முழுவதும் கிராமங்கள், தெருக்கள் மற்றும் வீடுகளுக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன்.

இந்த நிகழ்வுகளின்போது, சிலர் இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பதுடன், முன்விரோதம் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பழிவாங்கும் நோக்கில் சில சூழ்ச்சிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக எனது உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, நான் மக்களைச் சந்திக்கும் நிகழ்வுகளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் எனக்கு தனிப்பட்ட காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என கூறியுள்ளார். ஒரு எம்எல்ஏவே தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Stories: