மதுரை: சீமான் குறித்து அவதூறு பேசியதாக யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவதூறு பேசுதல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை உயர்நீதிமன்றத்தின் நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாம் தமிழர் கட்சினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகிய இருவரும் அவதூறான கருத்துக்களை பேசியும் அவரை சித்தரித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறையிடம் பல முறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே இந்த யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட அவதூறான காட்சிகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி விக்டோரியா கவுரி, “முதல்வர் குறித்து, திமுக எம்.எல்.ஏ. அவதூறாக பேசினார் என்பதற்காக உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறை, சீமான் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை?” என கேள்வி எழுப்பினார்.
தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ சீமான் தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக தான் உள்ளார். எனவே, யூடியூபர்கள் வெளியிட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும். இன்று வழக்கு பதிந்து நாளை (ஜூலை 29) காவல்துறையினர் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி விக்டோரியா கவுரி கூறினார்.
அதன் அடிப்படியில் இன்று யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல்மீதும் மதுரை சைபர் கிரிம் போலீசார் தகவல் தொழிநுட்ப பிரிவி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதன் அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளனர்.
