டெல்லி: டெல்லியில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் தீவிர போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் திரண்டு ஆதரவு அளித்து வரும் நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என பிஜேடி தலைவரும் ஒடிசா எதிர்க்கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நிலவும் சூழல் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய கல்வி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்வதே சரியான நடவடிக்கை என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான போராட்டத்திற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அரவிந்த் கேஜ்ரிவால், சரத்பவார் மற்றும் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கும் தங்களது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் மிகத் தீவிரமாக எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், டெல்லி அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது
