பெருந்துறை அருகே போதையில் மயங்கி கிடந்த டிரைவர் சாவு

பெருந்துறை, ஜூலை 21: பெருந்துறை அருகே மேக்கூரை சேர்ந்த டிரைவர் சீனிவாசன் (37). நேற்று முன்தினம் இரவு பெருந்துறை பவானி ரோட்டில் உள்ள ஒரு மதுக்கடையில் மது அருந்திவிட்டு அங்கே சாலையோரம் மது போதையில் கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்ததும் சீனிவாசனின் அண்ணன் ராஜா மற்றும் குடும்பத்தினர் சீனிவாசனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சீனிவாசன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: