ஹார்டுவேர் கடையில் ரூ.60 ஆயிரம் திருட்டு

கோபால்பட்டி, ஜூலை 16: சாணார்பட்டி அருகே கோபால்பட்டியை சேர்ந்தவர் கோபி (45). இவர் திண்டுக்கல் சாலையில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் நேற்று காலை கடையை திறக்க வந்தார்.

அப்போது கடையின் பூட்டுகள், ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த ரூ.60 ஆயிரம் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோபி புகாரில் சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை வைத்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

 

Related Stories: