சென்னை: சென்னையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதானவர் ராஜா. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வயிற்று வலி என கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசாரை ஏமாற்றி ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து கைதி ராஜா தப்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தப்பியோடிய கைதியை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
