விகேபுரம்,ஜூலை 13: விகேபுரம் அருகே பன்றிகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விகேபுரம் அருகே ஆறுமுகம்பட்டியை சேர்ந்த மில்லர் (56). இவர் பராமரித்து வளர்த்து வந்த பன்றிகளில் 7ம், சிவந்திபுரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர் வளர்த்து வந்த ஒரு பன்றியும் திருடு போனது. இதுகுறித்து இருவரும் விகேபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அடையக்கருங்குளம் முத்து கிருஷ்ணன் மகன் கிருபாகரன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சமூக நீதித்துறையின்
கடம்பன்குளம் பள்ளி மாதிரி பள்ளியாக தரம் உயர்கிறது நெல்லை, ஜூலை 11: சமூக நீதித்துறையின் கீழ் இயங்கும் கடம்பன்குளம் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சமூக நீதி விடுதியின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆனந்த் மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். கடம்பன்குளம் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியை மாதிரி பள்ளியாக தரம் உயர்த்துவது குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கற்றல் தரம், கற்பித்தல் நிலை, வகுப்பறைகள், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், பள்ளி வளாகத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்தும், கூடுதலாக தேவைப்படும் வசதிகள் போன்றவை குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பள்ளியின் தரம் உயர்த்துதல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைககள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பள்ளி மாணாக்கர்களுடன் கல்வி பயன் குறித்தும், உயர்க்கல்வி பயில்வதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடினார். தொடர்ந்து, சமூக நீதி பள்ளி மாணவர் விடுதியை ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், விடுதியின் செயல்பாடுகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
