சென்னை: 118 என்ற மேஜிக் எண்ணை அடைய ராக்கெட் வேகத்தில் தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து தவெக செல்பவர்கள் பதவி சுகத்துக்காகவும் பணத்தை பாதுகாக்கவும் செல்கின்றனர். தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் இருந்து காத்துக்கொள்ள தவெகவுக்கு அடைக்கலம் போகின்றனர் என்று கூறினார்.
