தஞ்சை: தஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் மா.சேகர் தவெகவில் இணைந்த நிலையில் அம்மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தஞ்சை மாவட்டத்தில் அமைப்பு ரீதியிலான 4 மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனையில் அதிமுக தேர்தல் தோல்வி குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
