விஜய்யை பார்த்து வியந்து போயிருக்கிறார் மோடி: செங்கோட்டையன் லகலக

கோபி: கோபி அருகே நல்லகவுண்டன்பாளையத்தில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலை கடையை, வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்த பின், அவர் பேசியதாவது:
இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக முதலமைச்சர் விஜய் விளங்குகிறார். பிரதமரே விஜய்யை பார்த்து வியந்து போயிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றுவதாக பிரதமர் முதல்வரிடம் உறுதியளித்திருக்கிறார். ஒன்றிய அரசிடம் இணக்கமாக இருந்து பணிகளை முழுமையாக நிறைவேற்றுவோம். பத்திரப்பதிவு செய்தவுடன் பட்டா உடனே கிடைக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. பத்திர பதிவு செய்யும்போது ஆன்லைன் மூலமாக நேரடியாக பட்டாக்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனி வட்டாட்சியர் அலுவலகம் செல்ல தேவையில்லை.

பூஜ்ஜியம் மதிப்புள்ள நிலங்கள் பயன்படுத்த முடியாமல் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் அரசு வழிகாட்டி மதிப்பீடு உள்ள நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருவாய் துறையில் ஓராண்டு காலத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் ஆன்லைன் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் வழியில் துறைகளும், அமைச்சர்களும் நடந்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

குதிரை பேரமா… அப்டீன்னா என்ன?
ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: குதிரை பேரம் என்பது எனக்கு புரியவில்லை. எல்லோரும் குதிரை பேரம் என சொல்கிறார்கள் எனக்கு புரியாமல் உள்ளது. புரியாத ஒன்றை குதிரை பேரம் என சொல்கின்றனர். அதற்கு வேறு பொருள் தமிழ்நாட்டில் தேடிக் கொண்டிருக்கின்றோம். எப்படி அதற்கு பதில் சொல்வது என சிலபஸில் தேடிக் கொண்டிருக்கின்றோம். கிடைத்தால் அதற்கு பதில் சொல்கிறோம். கரூர் சம்பவத்தில் கணக்கு தீர்க்காமல் விடமாட்டேன் என ஆதவ் சொல்லி இருப்பது, 41 குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொன்னது தான். கணக்கு என்பது அதுதான். அதில் பிணக்கு போடக்கூடாது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: