செங்குன்றம் அருகே 2 ஏடிஎம் கண்ணாடிகள் 10 கார், ஆட்டோ உடைப்பு: ரவுடி கும்பல் அட்டூழியம்

புழல்: செங்குன்றம் அருகே 2 ஏடிஎம் கண்ணாடிகள் 10க்கும் மேற்பட்ட கார்கள், ஆட்டோக்கள் உடைத்து ரகளையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளை முயற்சியை திசைதிருப்ப வாகனங்களின் கண் ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டார்களா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

செங்குன்றம் அடுத்த கலைஞர் கருணாநிதிநகர் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் காந்திநகர் காவல் உதவி மையம் அருகேயுள்ள ஆக்சிஸ் வங்கி மற்றும் கனரா வங்கிகளின் ஏடிஎம் கண்ணாடிகளை நள்ளிரவில் மர்ம நபர்கள் அடித்து உடைத்துள்ளனர். இதேபோல சாலையில் சென்ற 10க்கும் மேற்பட்ட கார்கள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்களின் கண்ணாடிகளையும் மர்ம கும்பல் உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளில் இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கண்ணாடிகளை அடித்து உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏடிஎம் கண்ணாடிகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது அலாரம் ஒலித்ததால் கொள்ளை சம்பவத்தை திசை திருப்ப வாகனங் களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்களா? அல்லது கஞ்சா, மதுபோதையில் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: