இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72 லட்சம் கோடியாக அதிகரிப்பு..! RBI தகவல்

டெல்லி: இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நாட்டின் வெளிநாட்டுக் கடன் குறித்த புதிய தரவுகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.72.15 லட்சம் கோடியாக (762.8 பில்லியன் டாலர்) அதிகரித்து உள்ளது. இந்த தகவல் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு பாதிக்கப்பட்டதாகவும், இதனால் நடப்பாண்டு மார்ச் இறுதியில் இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.72.15 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும் ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது.

இது ஆண்டிற்கு ஆண்டு என்ற அடிப்படையில் 26.3 பில்லியன் டாலர் கடன் அதிகரிப்பை குறிக்கிறது. இந்த அளவு கடன் அதிகரித்துள்ளதற்கு , அரசு சார்ந்த கடன்களை விட தனியார் துறை சார்ந்த கடன்களே காரணம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (GDP) ஒப்பிடுகையில் கடனின் அளவும் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (external debt-to-GDP ratio), ஓராண்டுக்கு முன்பு இருந்த 19.8 சதவீதத்திலிருந்து 20.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனிடையே இந்தியாவின் குறுகிய கால கடன் சற்று அதிகரித்திருந்தாலும், நாட்டின் பலமான அந்நியச் செலாவணி இருப்பு (Foreign Exchange Reserves) உள்ளதால் இந்த கடன் அளவானது, கட்டுக்குள் இருப்பதாகவே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

Related Stories: