மும்பையில் கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி

மும்பையில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் போல மழைநீர் பெருக்கெடுத்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொடர் மழை காரணமாக நவி மும்பை பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீக்கு அதிகமாக மழையின் அளவு பதிவாகியுள்ளது.

Related Stories: